பாஜகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது! - சரத் பவார். - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் கைது செய்வதும் பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது!

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டத்தை தேர்தலுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நேரில் ஆஜராக தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்பி சஞ்சய் ராபர்ட் மீது குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிக்கையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரும் இடம் பெற்றுள்ளது. 

 அந்த குற்றப்பத்திரிகையில் 2008- 2009 ம் ஆண்டு குடிசை பகுதியில் வசிப்பவர்களை குடிசை சீரமைப்பு திட்டத்தில் சேர வலியுறுத்தி உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். அதன் பிறகு பல்வேறு கட்ட சந்திப்பின் முடிவில் தான் ராகேஷ் வாதவான், பிரவீன் ராபர்ட் மற்றும் சஞ்சய் ராபர்ட் ஆகியோர் இத்திட்டத்தை செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில் "எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு தங்கள் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என்பது இன்றைய செய்தித்தாளை பார்த்தால் தெரிகிறது.எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்வதும் அவர்களை கைது செய்வதும் தான் மத்திய அரசின் இன்றைய முதன்மை வேலையாக உள்ளது. 

தேர்தல் வெற்றி குறித்து பாஜகவிற்கு சந்தேகம் எழும்போதெல்லாம் இத்தகைய கைது நடவடிக்கைகளை முக்கிய வேலையாக மாற்றி விட்டு நாட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சவால்களை கண்டு கொள்ள மாட்டார்கள். 

பாஜகவின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது இவர்களின் நடவடிக்கையால் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதற்கான பதிலடியை அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் கொடுப்போம் என கடுமையாக சாடியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election fear has come to BJP says Sarath Pawar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->