தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும்..தேர்தல் ஆணையத்துக்கு ஓடிய கெஜ்ரிவால்! - Seithipunal
Seithipunal


டெல்லி சட்டசபைத் தேர்தல் நியாயமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  முதல் மந்திரி அதிஷி மற்றும் முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடிக்கிவிட்டுள்ளது,அதன் பின்னர்  பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

 நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தநிலையில் இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.இந்தநிலையில் , விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வரும் டெல்லி போலீஸ் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அதிஷி மற்றும் முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் தேர்தல் நியாயமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்துக்கு சென்று புகார் அளித்தபின், செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில், இன்று எங்களை சந்திப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது என்றும் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம் என தெரிவித்தார்.மேலும்  நாங்கள் சில பிரச்சனைகளை எழுப்பியதால் சில இடங்களில் வன்முறையும், குண்டர் சண்டையும் நடந்துள்ளது என்றும் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது என கூரிய கெஜ்ரிவால்  பெரிய அளவிலான வாக்காளர் அடக்குமுறை குறித்தும் அவர்களை எச்சரித்தோம் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elections should be fair. Kejriwal rushes to Election Commission


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->