இந்திய ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்! - Seithipunal
Seithipunal


எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை முதல் நாளிலேயே வேலையில் இருந்து நீக்கினார். இதேபோன்று உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ட்விட்டர் அலுவலகத்தில் பணியாற்றும் இந்தியர்களின் வேலை நீடிக்குமா அல்லது பரிபோகமா என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று ட்விட்டர் இந்தியா அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் குறித்தான உத்தரவு வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் ட்விட்டர் நிறுவனத்தை எதிர் பார்த்ததை விட கூடுதல் விலைக்கு எலான் மஸ்க் வாங்கியதால் இத்தகைய பணி நீக்க முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை அதிகரித்து செலவீனங்களை குறைக்கும் சூழலுக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார். முதற்கட்டமாக உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் மூடவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ட்விட்டர் அலுவலங்களில் பணிபுரிவோர் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Musk terminated Indian employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->