தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே, அரசின் தலையாய கடமை; ராகுல் காந்தி கருத்து..! - Seithipunal
Seithipunal


''தனது மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை, '' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, சென்னை ஐஐடி மாணவர்கள் சந்தித்து உரையாடினர். இதன்போது கல்வி, திறன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுடன் ராகுல் கலந்துரையாடியுள்ளார்.

திறமை என்பதற்கான வரையறை குறித்து ராகுல் கூறியது; 
ஒருவர் தன்னை சுற்றி நடப்பதையும், தன்னைச்சுற்றி உள்ள சூழ்ச்சிகளை துல்லியமாக கவனிப்பதையே திறமை என நான் கருதுகிறேன். பயம், பேராசை மற்றும் கோபத்தை கையாள்வது இதில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை என நான் நம்புகிறேன். இதனை தனியார் மயம் மூலம் அல்லது நிதியுதவி மூலம் செய்ய முடியாது. கல்விக்கும், அரசு அமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கும் நாம் நிறைய செலவு செய்ய வேண்டும் என்று ராகுல் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ensuring quality education is the prime duty of the government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->