அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை.!!
commercial cylinder price decrease
நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
அப்படி விநியோகம் செய்யப்பட்டு வரும் சிலிண்டர்களின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிலவரம் குறித்து காண்போம்.
அதன் படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.43.50 குறைந்து ரூ.1921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
commercial cylinder price decrease