மகளிர் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் - சிசிடிவியால் சிக்கிய சம்பவம்.!
man arrested for youth dance front of ladies hostel in kerala
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் மகளிர் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில், வாலிபர் ஒருவர் மகளிர் விடுதி முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச செய்கையில் ஈடுபட்டு நடனமாடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விடுதி நிர்வாகி தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அந்த நபர் திருவனந்தபுரம் ஒற்றசேகரமங்கலம் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், அவர் மதுபோதையில் ஆட்டம் போட்டதும் தெரிய வந்தது. அதன் படி போலீசார் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
man arrested for youth dance front of ladies hostel in kerala