அந்த நாள்... இந்திய வரலாற்றின் கருப்பு நாள்: ஹேமந்த சோரன் பேச்சு!
ex cm Hemant Soren Jharkhand assembly
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன் நம்பிக்கை வாக்கெடு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக முயற்சித்தது. பொய் வழக்குகளில் ஹேமந்த் சோரனை சிக்கவைக்க பாஜக விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது.
ஹேமந்த் சோரனின் நிர்வாகத்தில் என்னுடைய அரசு இரண்டாம் பகுதியாகும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ஹேமந்த் சோரன்,
நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம். மத்திய அரசின் சதிக்குப் பிறகு என்னுடைய கைது நடவடிக்கையில் ராஜ் பவன் கருவியாக செயல்பட்டது.
நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ஆம் தேதி, இந்திய வரலாற்றில் கருப்பு நாள். எனக்கு எதிரான குற்றங்களை நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகுகிறேன். இதை பாஜகவுக்கு சவாலாக விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
ex cm Hemant Soren Jharkhand assembly