₹2000 நோட்டுகளை மாற்றி தருவதாக பண மோசடி - தமிழக முன்னாள் போலீசார் கேரளாவில் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் அஜித். பொருளாதாரப் பிரிவு போலீஸாராலும், சட்டம் ஒழுங்கு போலீஸாராலும் தேடப்பட்டு வரும் இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அஜித் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கமிஷன் அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகளை, 500 ரூபாய் தாள்களாக மாற்றித் தருவதாக சொல்லி வாங்கிவிட்டு, மாற்றிக் கொடுக்காமல் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

இவர்களை, போலீஸார் தேடிவந்த நிலையில் அஜித்தின் முக்கியக் கூட்டாளியான தமிழகத்தின், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சரவணவேலன் என்பவரைக் கேரளப் போலீஸார் கைது செய்தனர்.

சரவணவேலன் கடந்த 2011-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் தொழில்நுட்பப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்ற பின்னர் பல இடங்களிலும் லஞ்சம் வாங்கி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். 

ஒரு கட்டத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தன் எஸ்.ஐ பணியையும் இழந்தார். இப்போது அஜித்தின் முக்கியக் கூட்டாளியாக வலம் வருகிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பும் அவர் போலீஸ் என்று அடையாள அட்டையும், அவர் பயன்படுத்திய காரில் போலீஸ் ஸ்டிக்கரும் ஒட்டி இருந்தார். கைது செய்யப்பட்டு இருக்கும் சரவணவேலன் மூலம் அஜித்தைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ex tnpolice arrested in Kerala for money fraud by exchanging rs2000 notes


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->