தேர்வு வினா தாள் கசிவு முறைகேடுகளை கண்டுபிடிக்க முன்னாள் இஸ்ரோ தலைவர் !! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையால் வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த குழுவிற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குவார். ராதாகிருஷ்ணன் தேசிய தேர்வு முகமையில் என்ன தவறு என்று கண்டுபிடிப்பார். வினா தாள்கள் எப்படி கசிந்தது, நீட் தேர்வில் எப்படி முறைகேடு ஏற்பட்டது என ஆராய இந்த குழு அமைக்கபட்டுள்ளது. 

டாக்டர் கே ராதாகிருஷ்ணன் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 1970ஆம் ஆண்டு கேரளா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின்னர் 1976 இல் பெங்களூர் IIM இல் PGDM பட்டம் பெற்றார். மேலும் 2000 ஆம் ஆண்டில் IIT காரக்பூரில் இந்திய புவி கண்காணிப்பு அமைப்புக்கான சில உத்திகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் வாங்கினார்.

டாக்டர் கே ராதாகிருஷ்ணன் இந்திய தேசிய அறிவியல் அகாடமி , இந்திய தேசிய பொறியியல் அகாடமி , இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் இந்தியா மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியர்ஸ் இந்தியா ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார். மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.

ராதாகிருஷ்ணன் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஏவியனிக்ஸ் பொறியாளராக தனது பயணத்தை தொடங்கினார். விண்வெளி ஏவுதள அமைப்புகள், விண்வெளி பயன்பாடுகள் மற்றும் விண்வெளி திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் இஸ்ரோவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகவும், தேசிய தொலை உணர்திறன் அமைப்பின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை புவி அறிவியல் அமைச்சகத்தில் பணியாற்றினார். அவர் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் நிறுவன இயக்குநராகவும், இந்திய தேசிய சுனாமி எச்சரிக்கை அமைப்பின் முதல் திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் சர்வதேச அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார், இதில் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தின் துணைத் தலைவர் , இந்தியப் பெருங்கடல் உலகளாவிய பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனத் தலைவர் மற்றும் ஐ.நா.வின் COPUOS STSC பணிக்குழுவின் தலைவர் போன்ற பதவிகளில் தலைமைத்துவம் வகித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ExISRO chief to find exam paper leak irregularities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->