ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து..!
Express train derails in Andhra Pradesh
ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரசின் (20810 ) என்ற ரயிலில் இரண்டு பெட்டிகள் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இவ்வாறு தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்ட பிறகு ரெயில் மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, வால்டெர் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளதாவது; ரெயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அடுத்ததாக அமைந்துள்ள பொது இருக்கை (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று காலை 11:56 மணிக்கு ரெயில் புறப்படும்போது, விஜயநகரம் ரெயில் நிலையம் அருகில் தடம் புரண்டன என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஜிஎஸ் மற்றும் எஸ்எல்ஆர் பெட்டிகளைத் தவிர்த்து ரெயில், மதியம் 12:47 மணிக்கு அனைத்து பயணிகளுடன் நிலையத்திலிருந்து புறப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டது. இதன் பின்னர் ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Express train derails in Andhra Pradesh