இந்திர பகவான் மீது நடவடிக்கை எடுங்கள்.. விவசாயி மனு.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்திலுள்ள ஜகலா  கிராமத்தைச் சார்ந்த விவசாயி சுமித் குமார் யாதவர். கடந்த சனிக்கிழமை நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சென்று மழையின் கடவுளான இந்திர பகவான் மீது புகார் மனு ஒன்று அளித்தார். 

அந்த மனுவில், மாவட்டத்தில் சரியான மழை இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மாவட்ட நீதிபதி ஆகிய நீங்கள் கடமையை சரியாக செய்யாத இந்திர பகவான் மீது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைத்து அந்த மனுவை அனுப்பி உள்ளனர்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, அப்படி ஒரு கடிதத்தை நான் மேல் நடவடிக்கைக்கு அனுப்பவில்லை என கூறினார். ஆனால், அவர் கையெழுத்திட்ட அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து மற்றொரு அதிகாரி கூறிய போது, குறை தீர்ப்பு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் மக்களிடமிருந்து வரும். அவைகள் அனைத்தும் படித்து பார்க்க முடியாது என்பதால் அப்படியே மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer Complaint against God Indra Bhagwan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->