வாகன ஓட்டிகளே உஷார்! இனி இதை ஒட்டாத வாகனங்களுக்கு இனி இரு மடங்கு கட்டணம்!
Fast tag issue new order
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஃபாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் ஃபாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதால் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதோடு, நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு அசவுகரியங்களையும் ஏற்படுத்துகிறது.
இதனால், சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் வில்லை ஒட்டாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் ஒட்டப்படாத வாகன ஓட்டுனரிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.