தொழிற்சாலையில் வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி; மகாராஷ்டிரா முதலமைச்சர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம் பந்தரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்தனர். மேலும், 07 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த 07 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குறித்த வெடி விபத்தின் சத்தம் 05 கிலோமீட்டர் தொலைவு வரை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அவர்கள் குடும்பத்துக்கு 05 லட்சம் நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Financial assistance of Rs 05 lakhs to the families of the victims in the explosion in the factory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->