தீபாவளி எதிரொலி - ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் அபராதம்.!
fined to peoples for firecrackers carying in train
வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
அப்போது, பலரும் தாங்கள் பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதால், ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
fined to peoples for firecrackers carying in train