டெல்லி: காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி லாரன்ஸ் ரோடு தொழிற்பேட்டை பகுதியில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து சுமார் 27 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை இந்த தீ விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at footwear factory in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->