தெலுங்கானா : 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா செகந்திராபாத்தில் ஐந்து மாடி கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள ராம்கோபால்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லகுட்டாவில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் விளையாட்டு மற்றும் ஆடைகள் ஷோரூம் இருந்தது காலை 11:30 மணியளவில் தீ ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் கிரேன் உதவியுடன் ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் கட்டிடத்தில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire breaks out in 5 storey building in Telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->