முதல் இருபது சதவீத மாணவர்கள் ஐஐடிகளில் சேரலாம் - மத்திய அரசு தகவல்.!
first twenty percentage students each college into iit
நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி உள்ளிட்ட நிறுவனங்களில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதுவது அவசியம். அந்த தேர்வை எழுதுவதற்கு, மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், இந்தத் தேர்வில் தளர்வு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தளர்வு வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன் படி, ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20 சதவீத மாணவர்கள் சேரலாம். அதாவது அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஐ.ஐ.டி. படிப்புகளில் சேரலாம் என்றும், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20 சதவீத மாணவர்கள் மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்த முதல் 20 சதவீதத்தினர் பட்டியலில் வரும் மாணவி அல்லது மாணவர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்களில் முதல் 20 சதவீத மாணவர்கள் 75 சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றதால் இந்த வாய்ப்பை பெற முடியாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நடந்த தொடர் ஆலோசனைக்குப்பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றுடன் முதற்கட்ட ஜே.இ.இ. தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நிறைவடைகிறது. இந்த தேர்வு வருகிற 24 மற்றும் 31-ந்தேதிக்கு இடையே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை இந்த மாதம் இறுதியில் நடத்துவதற்கு எதிராக பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
first twenty percentage students each college into iit