கவிழ்ந்து விழுந்த ராணுவ வாகனம் - பரிதாபமாக பறிபோன 5 உயிர்.!
Five army soldiers died for accident in jammu kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Five army soldiers died for accident in jammu kashmir