உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்.!
five new justice appointed in supreme court
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் முடிவில், ராஜஸ்தான் மாநிலம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த ஐந்து நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இவர்களின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது,
"புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளனர். அவர்கள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். மேலும், இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
five new justice appointed in supreme court