சுழட்டி போட்ட சூறாவளி - 5 பேர் பலி; 500 பேர் படுகாயம்.!
five peoples died and 500 peoples injured for cyclone in west bengal
மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பைகுரி நகரில் நேற்றிரவு வீசிய கடுமையான சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி, ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 500 பேர் வரை காயமடைந்தனர்.
இதையறிந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்து விட்டு நேற்றிரவு ஜல்பைகுரிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார். அதன் பின்னர், அவர் ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிர்வாகம் வழங்கும். சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
இதில், உயிரிழப்பு என்பது மிக பெரிய பாதிப்பு. பேரிடர் மேலாண் முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நிலைமையை எதிர்கொள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
five peoples died and 500 peoples injured for cyclone in west bengal