ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுவன் - இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவுசா அருகே கலிகாட் கிராமத்தில் கடந்த 9-ந்தேதி வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற ஐந்து வயது சிறுவன் சுமார் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதையறிந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் 2 நாட்களாக ஈடுபட்டனர். இதற்கு முன்னதாக 150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிப்பதற்கு வசதியாக ஆக்சிஜனை குழாய் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனின் ஒவ்வொரு அசைவு மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க கேமராக்களை குழிக்குள் இறக்கி பொருத்தினர்.

இதைத் தொடர்ந்து கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு வீரர்கள் உள்ளே இறங்கி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

மீட்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் இருந்ததையடுத்து அந்த சிறுவன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் விழூந்த்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five years old boy rescue borewell in rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->