அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்! அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்!
Nayantara Music Show vigneshshivan
திரைப்பட இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், நேற்று புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தார்.
அந்த சந்திப்பில், புதுவை அரசின் சீகல்ஸ் ஓட்டலை வாங்கலாமா என விக்னேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமைச்சர், அது அரசு சொத்து என்றும், ஒப்பந்த அடிப்படையில் கூட கொடுக்க முடியாது என பதிலளித்தார்.
பின்னர், விக்னேஷ் புதுச்சேரியில் தனியார் வசம் உள்ள கடற்கரை பகுதிகளைப் பற்றி ஆராய்ந்தார். ஆனால், அனைத்தும் ஏல முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் கலை நிகழ்ச்சி நடத்த ஏதேனும் இடம் வழங்க முடியுமா என விக்னேஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், துறைமுக வளாகத்தில் 4,000 பார்வையாளர்கள் அமர முடியும் வகையில் பொழுதுபோக்கு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கட்டணத்துடன் முன்பதிவு செய்தால் நிகழ்ச்சி நடத்தலாம் என கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட விக்னேஷ் சிவன், அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, நிகழ்ச்சிக்கான திட்டங்களை இறுதி செய்தார். இதில் நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Nayantara Music Show vigneshshivan