ஒரே கடவுளை வழிபட தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி.!
governor rn ravi speech no pray one god
கன்னியகுமாரி மாவட்டத்தில் இன்று அகிலத்திரட்டு அம்மானை உதய தினவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
அய்யா வழி பக்தா்களின் புனித நூல் அகிலத்திரட்டு அம்மானை. அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் காா்த்திகை மாதம் 27-ம் தேதி ஆகும். இந்த நாளை அய்யாவழி பக்தா்கள் ஒவ்வொரு வருடமும் அகிலத்திரட்டு உதய தினமாகக் கொண்டாடி வருகின்றனா்.
இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பேசியதாவது:-
"அனைவரும் ஒன்று. அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட வேண்டும் என்று சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம்; வேறு உடை அணியலாம்; ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றுதான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
governor rn ravi speech no pray one god