அந்த மூன்று குரங்கு கோமாளிகளுக்கு இதே வேலை! கிழித்தெடுத்த நயன்தாரா!
Actress Nayanthara condemn to valipechu
நடிகை நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் காதல் வாழ்க்கையை மையமாக கொண்டு, ஆவணப்படம் ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்க காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரத்தில் யூடியூப்பில் சிலர் நயன்தாராவுக்கு எதிராகவும், தனுஷுக்கு ஆதராவாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா ஒரு நேர்காணல் ஒன்றில் மறைமுகமாக யூடியூப் சேனல் ஒன்றை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
"யூடியூப்பில் ஒரு மூன்று பேர் உள்ளனர். அவர்கள் வெளியிடும் வீடியோக்களில் பெரும்பாலானவை என்னை குறித்தே இருக்கும். ஏனெனில் என்னை பற்றி பேசினால் வீவ்ஸ் அதிகரிக்கும், அதனால் பணம் சம்பாதிக்கிறார்கள்.
பொய் பேசும், தவறானதை கேட்கும், தவறானதையே பார்க்கும் மூன்று குரங்குகளாக அந்த 3 பேர் உள்ளனர். அவர்கள் கோமாளிகள். என்னை பற்றி பேசினால் பிரபலம் ஆகலாம் என்ற எண்ணமே அவர்களை இப்படி பேச வைக்கிறது" என்று நடிகை நயன்தாரா விமர்சித்துள்ளார்.
English Summary
Actress Nayanthara condemn to valipechu