வயநாடு நிலச்சரிவு - ட்ரோன்கள் மூலம் உணவு விநியோகம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள, வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரைக்கும்  பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே மீட்புப் படை வீரர்களுக்கு உதவும் வகையில் துரிதமாக உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கும் பணி டிரோன்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் உள்பட 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சாலியாற்றங்கரையோரம், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் உடல்களைத் தேடும் பணி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரைக்கும் 180 பேரின் நிலை என்னவென்று தெரியவரவில்லை. 

இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்தத் துயர சம்பவத்தில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்ததுடன் பலா் வீடுகளை இழந்து நிற்கின்றனா். அவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரணம் வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

food provide to wayanadu landslide affected peoples by drones


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->