சிக்கிமில் பரிதாபம், சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் !! - Seithipunal
Seithipunal


சிக்கிமில் பெய்து வரும் காணமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்த மாநிலத்தில் பல இடங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக சிக்கிமில் 15 வெளிநாட்டினர் உட்பட 1,500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். மங்கன் மாவட்டத்தில் உள்ள மங்கன், சுங்தாங் மற்றும் லாச்சுங் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சிக்கித் தவிக்கின்றனர்.

நேற்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றும் திட்டத்தை சிக்கிம்  மாநில அரசு கொண்டிருந்தது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகாப்டர்கள் புறப்பட முடியவில்லை. திங்கள்கிழமை வானிலை சீராகும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

இடைவிடாத மழை மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் தடைபட்டுள்ளதால், அவற்றை வெளியேற்ற அரசு பயன்படுத்த முடியவில்லை. மாநிலத் தலைநகர் காங்டாக்கைத் தாண்டி மங்கன் மாவட்டம் வரையிலான பகுதிகளில் நிலச்சரிவுகள் பெரும்பாலும் ஏற்பட்டன.

கனமழை காரணமாக சிக்கிமில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் இணைப்பும் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அந்த சுற்றுலா பயணிகளிடம் பணம் இல்லை மற்றும் ஏடிஎம்கள் செயலிழந்து உள்ளது என இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு தவித்து வருவதாக மன வேதனை தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foreign tourist traped in flood in sikkim


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->