அமர்நாத் யாத்திரை : பூரி, தோசை உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை.!
forty foods ban in amarnath yatra
அமர்நாத் யாத்திரை : பூரி, தோசை உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை.!
இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கு, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து செல்வார்கள். அப்படி செல்லும் பக்தர்கள் தேவையான உணவை உடன் எடுத்து செல்வார்கள். இந்த நிலையில், யாத்திரைக்கு எடுத்துச் செல்ல 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் புலாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பத்துரா, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, சௌமைன் மற்ற பொரித்த மற்றும் துரித உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இதற்கு பதிலாக பக்தர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்களையும், சில அரிசி உணவுகளையும் எடுத்துச்செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 40 பொருட்களைத் தவிர மற்ற அனைத்தும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கந்தர்பால் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள், மேலே பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை மீறி எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
forty foods ban in amarnath yatra