மேகாலயாவில் திடீர் நிலச்சரிவு - ஒரே வீட்டில் 4 பேர் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


மேகாலயாவில் திடீர் நிலச்சரிவு - ஒரே வீட்டில் 4 பேர் உயிரிழந்த சோகம்.!

வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்று மேகாலயா. இந்த மாநிலத்தில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக மேற்கு ஜெயின்டியா ஹில் பகுதியில் உள்ள பைந்தோர்லாங்டைன் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருடன் புதைந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு பேரின் சடலங்களை மீட்டனர்.

பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசு நிவாரண நிதி வழங்கி உள்ளதாக மேகாலயா டிஜிபி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for land slide in meghalaya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->