மக்களே உஷார்! இந்தியாவில் மரணத்தை உண்டாக்கும் கொடூர வைரஸ்! 4 வயது சிறுமி பலி! - Seithipunal
Seithipunal


சண்டிபுரா வைரசால் குஜராத் மாநிலத்தில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 14 நோயாளிகள் தொற்று நோயால் இறந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. இதுவரைக்கும் வைரஸ் காய்ச்சல் 29 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரஸ் காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சு திணறல் அறிகுறிகளை கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள  அரசு மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அச்சிறுமி ஆறவல்லி மாவட்டம் மோட்டா கந்தாரியா கிராமத்தைச் சேர்ந்தவராவார்.சிறுமியின் மாதிரிகளை  சோதனை செய்தலில் சண்டிபுரா  வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சண்டிபுரா வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் இதுவே என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவர் சண்டிபுரா வைரசால் உயிரிழுந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four year old girl dies of Chandipura virus in Gujarat state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->