ஆசை ஆசையாக வாங்கிய மிட்டாய் - சிறுவனின் உயிரை பறித்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பர்ரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பர்ரா ஜரௌலி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 வயது சிறுவன் டோஃபி மிட்டாயை சாப்பிட்டு கொண்டிருந்தார். மனிதனின் கண் வடிவம் கொண்ட அந்த மிட்டாய் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது. 

சிறுவனின் தாயார், உடனே அந்த குழந்தையின் முதுகில் நன்றாக தட்டுவதற்கு பதிலாக பதட்டத்தில் அந்த சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். உடனே அந்த மிட்டாய் சிறுவனின் தொண்டையில் கொஞ்சம் ஆழமாக சென்றுள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், பதற்றமடைந்த தயார் சிறுவனை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவர்களாலும் அந்த மிட்டாயை அகற்ற முடியவில்லை. தீபாவளியை முன்னிட்டு விடுப்பில் சென்றதால், மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவர்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால், குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து டோஃபி மிட்டாய் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four years old boy died for eat dofy choclate in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->