மதுபோதையில் மனைவியின் கழுத்தை அறுத்த கொடூர கணவர் - தென்காசி அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு சிவனம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் சுரேஷ் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் தம்பதியினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தத் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் கிடந்த அரிவாளால் சிவனம்மாளின் கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் சிவனம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து குழந்தைகள் கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து சிவனம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த சுரேசை கைது செய்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்திவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for murder wife in thenkasi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->