சென்னையில் மாணவிகள் மயக்கம் : 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், கடந்த 25-ம் தேதி பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. மேலும் சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 45 மாணவிகளும் உடனடியாக அருகே இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 10 நாட்களுக்கு பின்பு நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், 3 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று 2வது நாளாக ரசாயன வாயு கசிவு குறித்து பள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விசாரணைக்கு பிறகு,
வார இறுதியில் அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girls faint in chennai 3 days off from school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->