கட்டுக்கட்டாக பணம், தங்கம், வெள்ளி நகை - வசமாக சிக்கிய முக்கிய புள்ளி!
Fraud Case Telangana Anti Corruption Squad Police Assistant Commissioner of Police
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வரராவை தெலுங்கானாவின் ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு பொருளாதார குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வர ராவ்.
இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையின் முடிவில் 3.5கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்களும், கட்டுக்கட்டாக பணமும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டன.
மகேஸ்வர ராவ் தனது பதவியை பயன்படுத்தி முறைகேடான வழிகளில் இந்த சொத்தை சேர்த்து உள்ளார் என்பது முதல் கட்ட குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் 1100 கோடி ரூபாய் அளவில் தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சொல்லப்படும் சாஹாதி இன்ஃப்ரா மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் தான் விசாரணை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
English Summary
Fraud Case Telangana Anti Corruption Squad Police Assistant Commissioner of Police