ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் பலி, பலர் காயம்!
Gas cylinder Explosion Andhra Pradesh
ஆந்திர மாநிலம்,நந்தியால் அருகே உள்ள சார்பு ரேவூ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 60 வயதான சுப்பம்மா மற்றும் 10 வயதான தினேஷ் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த 8 பேரும் நந்தியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணையில், வீட்டில் சமையல் செய்யும் போது கியாஸ் சிலிண்டர் கசிந்து வெடித்ததாக தெரியவந்துள்ளது.இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Gas cylinder Explosion Andhra Pradesh