டிரான்ஸ்பார்மருக்கு கூலர்... மத்திய பிரதேசத்தில் ருசிகரம்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே ஏசி, ஏர் கூலர் போன்ற மின்னணு சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

இத்தனையும் இருந்தும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த மத்தியபிரதேச மின்வாரியம் ஒரு ருசிகர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.

கோடைகாலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது நாடு முழுவதும் நிகழக்கூடிய ஒன்று தான். இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வேறு இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் மிகப்பெரிய அளவிலான ராட்சத கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரான்ஸ்பார்மர்கள் வெயிலின் தாக்கத்தால் சூடாகாமல் இருப்பதற்காக இந்த ராட்சத கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மத்தியப்பிரதேச மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ருசிகர சம்பவம் நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Giant cooler fixed for transformer in Indore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->