டி.வி நடிகைக்கு ஆபாச படம் ..வாலிபர் கைது..!
TV Actress Movie Youth arrested
டி.வி நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கேரளா ,கர்நாடக ,ஆந்திர போன்ற மாநிலங்களில் சினிமாதுறையில் பாலியல் தொல்லை அதிகரித்துவருகிறது,குறிப்பாக கேரளாவில் கேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதுமட்டுமல்லாமல் அந்த அறிக்கையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சில நடிகர்கள் கைதாகி ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்தநிலையில் ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் டி.வி நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். . கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் ஜூப்ளி ஹல்ஸ் என்ற இளம்பெண்ணுக்கு 21 வயது,அதே பகுதியில் வசித்து வரும் இவர் டி.வி. நாடகங்கில் நடித்து வந்தார்.
அப்போது பானி தேஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவரிடம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பானி தேஜா இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள தொல்லை கொடுத்தார்.
இதையடுத்து இளம்பெண் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
English Summary
TV Actress Movie Youth arrested