கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்த அல்லு அர்ஜுன் ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


‛புஷ்பா 2' திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வசூல்வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது. படத்தை பார்க்க, ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்தார். அவருடைய மகன் மூளை சாவடைந்துள்ளார். 

குறித்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருடன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 02 திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் கடந்த மாதம் 05ம் தேதி திரையரங்கில் வெளியானது. இதுவரையில் இந்த திரைப்படம் ரூ.02 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. அதாவது திரைப்படம் வெளியாகும் முந்தைய நாள் அதாவது டிசம்பர் 04ம் தேதி அதாவது 'புஷ்பா 2' திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 

அதனை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் அலைமோதினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து கோமா நிலையில் சிகிச்சையில் உள்ளார். 

இது தொடர்பான புகாரில் அல்லு அர்ஜுன் மீது சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு கடந்த 13ம் தேதி அவரை கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு சென்று அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதனை எதிர்த்து ,அல்லு அர்ஜுன் சார்பில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கும் அன்றைய தினம் விசாரிக்கப்பட்டதோடு, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு உடனே செல்லவில்லை. காலதாமதம் ஏற்பட்டது. 

இதனால் ஒருநாள் இரவு சிறையில் இருந்த  அர்ஜுன் டிசம்பர் 14ம் தேதி வெளியே வந்தார்.  கூட்ட நெரிசலில் பெண் இறந்த வழக்கில் தனக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அல்லு அர்ஜுன் சார்பில் நம்பள்ளி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று தீர்ப்பு அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று மாலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அத்துடன் , தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் 2 பாண்ட் பத்திரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரம் காலத்துக்கு மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்தால் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இப்போது நிம்மதியடைந்துளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court grants regular bail to Allu Arjun


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->