சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி!...18 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புகள் அடக்கம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள அய்யங்கேரி கிராமத்தில் 14 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் கடந்த 2006-ம் ஆண்டு வசித்து வந்தார்.  அப்போது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா என்பவர், தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் தேவைப்படுவதாகவும், உங்களது மகளை என்னுடைய வீட்டில் வேலை செய்ய அனுப்பினால் உரிய சம்பளம் கொடுப்பதாக கூறியதை அடுத்து, சிறுமியை அவரது தந்தை  அனுப்பி வைத்தார்.

5 ஆண்டுகள் கழித்த பிறகு மகளை திருப்பி அனுப்பி விடுமாறு சிறுமியின் தந்தை கேட்டுள்ளார். அதற்கு  சிறுமியின் பெற்றோரை அவர்கள் மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் காசர்கோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மோற்கொண்டதில் சிறுமியை ஹம்சாவும், அவரது மைத்துனரும் சேர்ந்து கற்பளித்து அவரை கொலை செய்து அவரது உடலை கோவாவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு அடியே புதைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கின்முக்கிய குற்றவாளியான ஹம்சாவுக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவி, மைத்துனருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  

இந்த வழக்கில்  கோவாவில் உள்ள வீட்டை இடித்து அதில் இருந்து கைப்பற்றப்பட்ட சிறுமியின் எலும்புக்கூடுகளை போலீசார் தடய அறிவியல் பிரிவிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் தனது  மகளின் எலும்புகளை தங்களிடம் தரக் கோரி கேரள நீதிமன்றத்தில்  சிறுமியின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சிறுமியின் எலும்புகள் அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுடுகாட்டில் முஸ்லிம் மத வழக்கப்படி அடக்கம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl raped and killed shock bones buried after 18 years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->