76வது குடியரசு தினம் -  கூகுள் வெளியிட்ட விசேஷ டூடுல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.அதில், லடாக்கி உடையில் ஒரு பனிச்சிறுத்தை, பாரம்பரிய இசைக்கருவியைுடன் வேட்டி-குர்தா அணிந்த 'புலி' மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் அதன் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் சில விலங்குகள் மற்றும் பறவைகள் டூடுலாக இடம்பெற்றுள்ளன.

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கி வரும் கூகுள் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுல் வெளியிடுவதை வழக்கமாக  கொண்டுள்ளது. அந்த வகையில், இன்று இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

அதில், லடாக்கி உடையில் ஒரு பனிச்சிறுத்தை, பாரம்பரிய இசைக்கருவியைுடன் வேட்டி-குர்தா அணிந்த 'புலி' மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் அதன் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது.மேலும் இதில் சில விலங்குகள் மற்றும் பறவைகள் 76வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் டூடுலாக இடம்பெற்றுள்ளன கூகுள்.

முதலாம் உலக போருக்கு பின் ஐரோப்பியாவில் துவங்கிய கலை மற்றும் பண்பாட்டு இயக்கமான சர்ரியலிசத்தின் கூறுகள் கலந்த வண்ணமயமான கலைப்படைப்பாக இந்த டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது என கூகுள் தெரிவித்துள்ளது . மேலும் கூகுள் (Google) ஆறு எழுத்துக்களை கருப்பொருளில் கலைநயத்துடன் பின்னிப் பிணைத்து, 'வனவிலங்கு அணிவகுப்பு' தோற்றத்தை அளிக்கிறது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் கூகுள் வலைதளத்தில் டூடுலின் விளக்கமாக, "இந்த டூடுல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது என்றும்  இது தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை குறிக்கும் நாள் ஆகும்," என்று கூகுள் கூறுகிறது.இந்த ஓவியத்தை புனேவைச் சேர்ந்த கலைஞர் ரோஹன் தஹோத்ரே வரைந்துள்ளார் என்றும் அணிவகுப்பில் சித்தரிக்கப்பட்டுள்ள விலங்குகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன என்று கூகுள் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google Doodle celebrates 76th Republic Day 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->