பிளாட்பாரத்தில் புகுந்த அரசு பேருந்து - பொதுமக்களின் கதி என்ன?
government bus accident in andira
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா பண்டித நேரு பேருந்து நிலையத்தின் 11வது பிளாட்பாரத்தில் நேற்று மாநில சாலைப் போக்குவரத்து கழக ஏசி சொகுசு பேருந்து ஒன்று நின்றது. அந்தப் பேருந்தில், இருபத்து நான்கு பயணிகள் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை இயக்க முற்பட்டபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் மக்கள் நின்ற பகுதியில் வேகமாகச் சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினாலும், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் திருமல ராவ் கூறுகையில், "விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை ஆர்டிசி ஏற்கும்.
பேருந்தின் ஓட்டுநருக்கு அறுபது வயது இருக்கும். வாகனம் சரியான நிலையில் உள்ளது. இருப்பினும், இந்த விபத்திற்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது ஓட்டுநரின் பிழை காரணமா? என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றார்.
English Summary
government bus accident in andira