4-ம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: முதல் குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Class 4 sexual assault case: First accused sent to judicial custody till May 21
மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் பாலியில் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட 5 பேரும் திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
![](https://img.seithipunal.com/media/child-gvnev.jpg)
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் சரணடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 4 பேருக்கு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார்.மேலும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தகுமாருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
Class 4 sexual assault case: First accused sent to judicial custody till May 21