உயிர் போக்கும் தருணம்... பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்!  - Seithipunal
Seithipunal


கேரளா, செம்பரக்கல் பகுதியில் சேர்ந்தவர் பரீத் (வயது 49). இவர் கேரளா அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். 

இவர் திருச்சூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து ஓட்டி சென்றார். அப்போது அவருக்கு திடீர்ரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் பேருந்தை சாலையோரமாக நிறுத்தி பேருந்திலேயே சுருண்டு படுத்துவிட்டார். இதனை பார்த்த பயணிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஓட்டுனர் நெஞ்சுவலி ஏற்பட்டதும் பேருந்து கவனமாக ஓட்டுச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டதால் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் தப்பினர். 

பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு தனது உயிரை விட்ட ஓட்டுனர் பரீத்தின் மறைவுக்கு கேரளா போக்குவரத்து துறை மந்திரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus driver died after save passengers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->