சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாத அரசு !! - Seithipunal
Seithipunal


தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, வருகின்ற ஜூலை மற்றும் செப்டம்பர் மாத காலாண்டிற்கான அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி, என்எஸ்சி மற்றும் கேவிபி உள்ளிட்ட அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் பழைய வட்டி விகிதங்கள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்னதாக தற்போது உள்ள 2024-25 நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டிற்கான அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது உள்ள 2024-25 ஆம் நிதி ஆண்டின் ஜூலை மற்றும் செப்டம்பர் காலாண்டில், சுகன்யா சம்ரித்தி யோஜனா மீதான வட்டி விகிதம் 8.2% தொடர்ந்து பொருந்தும். 

பொது வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி முன்பு போலவே 7.1% விகிதத்தில் கிடைக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புத் திட்டங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது மற்றும் சில சமயங்களில் அவற்றின் வட்டி விகிதங்களும் மாறும். தற்போது ​​அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4% முதல் 8.2% வரை உள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாத காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் கடைசியாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று மாற்றம் செய்தது. அதன் பின்னர் சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம் 0.20 சதவீதமும், 3 ஆண்டு கால வைப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 0.10 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது. 

இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண்களின் கல்வி மற்றும் திருமணம் தொடர்பான குறைகளை தீர்க்க தொடங்கப்பட்டது. இது கடந்த 22 ஜனவரி 2015 ஆம் ஆண்டு அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூ. 250, அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை. சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government not making change in interest rates of small savings schemes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->