ஹேக் செய்யப்பட்ட முகநூல் பக்கம்! அமைச்சரின் நேரில் கோரிக்கை வைத்த ஆளுநர்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், ஹேக் செய்யப்பட்டுள்ள திருநள்ளாறு கோவில் முகநூல் பக்கத்தை மீட்க கோரி, மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் முகநூல் பக்கத்தை மீட்க கோரி, மத்திய அமைச்சர் எல் முருகனிடம் ஆளுநர் தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் முகநூல் பக்கத்தில் தவறான பதிவுகளை பதிவிடாமல் தடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகனிடம் ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த வரின் செய்திக்குறிப்பில், "புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்தின் தேவஸ்தான முகநூல் பக்கத்தை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று வந்த கோரிக்கைக்கு, இன்று சென்னை விமான நிலையத்தில் மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை அவர்களை சந்தித்தபோது ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலய தேவஸ்தான முகநூல் பக்கத்தில் தவறான பதிவுகள் பதிவிடாமல் தடுக்க வேண்டுமென்றும் கோவிலின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மீட்டுத் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.

எனது கோரிக்கையை ஏற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் உடனே மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர்  அவர்களை தொடர்பு கொண்டு
ஆவண செய்வதாக உறுதி அளித்தார்" என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Tamilisai request for Thirunallar temple official fb page issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->