சாமானியர்கள் மீது பாஜகவிற்கு அக்கறை இல்லை - முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு..!
govt engineering college new building open in bihar chief minister
பீகார் மாநிலத்தில் சமஷ்டிபூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துக்கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது, "வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்தில் இருந்த பாஜகாவை விட தற்போதைய பாஜக முற்றிலும் வேறுபட்டது.
அந்த காலத்தில் இருந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய தலைவர்களிடம் அதை எதிர் பார்க்க முடியவில்லை. மேலும், சாதாரண மனிதர்கள் மீதும் அவர்களுக்கு அக்கறை இல்லை.
நான் பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அந்தக் கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன். இனிமேல் என் வாழ்நாளில், நான் சோஷலிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.
என்னுடன் கூட்டணியில் இருந்தபோது, லாலுபிரசாத் யாதவ் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடைபெற்றது. ஆனால் அங்கு ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீண்டும் என்னுடன் கைகோர்த்தவுடன், அரசியல் எஜமானர்கள் உத்தரவுப்படி, அவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போட்டு அவரை துன்புறுத்துகிறது" என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
govt engineering college new building open in bihar chief minister