"ஈஸ்டர் பண்டிகை": குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஈஸ்டர் வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் புனிதமான எண்ணங்களை நாங்கள் நினைவுகூருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டார் பதிவில், அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள். ஈஸ்டர் அன்பிற்கும் இரக்கத்திற்கும் சின்னம். உண்மை மற்றும் நீதிக்காக தம் உயிரை தியாகம் செய்து அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை இயேசு நமக்கு வழங்கினார். இறைவனின் கொள்கைகளை ஏற்று அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Greetings from President and Prime Minister on the Easter festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->