அச்சுறுத்தும் அரியவகை நரம்பியல் கோளாறு (GBS) பாதிப்பால் 08 பேர் உயிரிழப்பு; 205 பேர் பாதிப்பு..!
Guillain Barre syndrome has killed 8 people affected 205 people
இந்தியாவில் (GBS) என்ற நரம்பியல் கோளாறால் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது.
இந்த (GBS) நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்க கூடியது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்.
இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,மகாராஷ்டிரா மாநிலத்தில் GBS நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே, மக்கள் மத்தியில் மீண்டும் பீதிநிலை ஏற்பட்டுள்ளது.
குய்லின்-பார் சிண்ட்ரோம் (guillain barre syndrome) என்றால் என்ன?
குய்லின்-பார் சிண்ட்ரோம் guillain barre syndrome என்னும் நோயை கண்டறிந்தவர் Mr. Georges Guillain and Jean Alexandre Barre அவருடைய பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. மருத்துவத்தில் இது GBS- post inflammatory demyelinating polyradiculoneuropathy என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக GBS என்று சொல்லப்படும் இந்த நோய் அரிய வகை நரம்புக்கோளாறு ஆகும். அவசர நிலை நரம்பு கோளாறு என்று கூறப்படுகிறது.

எப்படி பக்கவாதம் என்பது உடனடி சிகிச்சை வேண்டிய நிலையோ அப்படிதான் இதற்கும் உடனடி சிகிச்சை அவசியம். ஆனால், இது அரிய வகை நோய் என்பதால் மக்களுக்கு பெரும்பாலும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
குய்லின்-பார் சிண்ட்ரோம் guillain barre syndrome உடலில் எப்படி தாக்கத்தை உண்டு செய்கிறது?
நோயெதிர்ப்பு அமைப்பு உடல் நரம்பு மண்டலத்தை தாக்கும் போது உடலில் எல்லா நரம்புகளையும் பாதிக்கிறது. ஆனால் பாதிப்பு கீழிருந்து மேல் தொடங்கும். முதலில் கால்களை பாதிக்கும், பிறகு கைகள், படிப்படியாக சுவாசம் என்று பாதிப்பை உண்டு செய்துவரும். இவை படிப்படியாக பாதிக்க இரண்டு வாரங்கள் வரை ஆகும். முதலில் நரம்பு பிறகு தசை பாதிப்பு என்று படிப்படியாக உண்டு செய்யும்.

உடல் பலவீனம்
கால்கள் நடப்பது கடினமாக இருப்பது
உட்கார்ந்து எழுவதில் சிரமம்
காலணியை கூட கால்களில் போட முடியாது
கைகளில் எந்த பொருள்களையும் தூக்கவோ பிடிக்கவோ முடியாது
தண்ணீர் விழுங்குவது சிரமமாக இருக்கும்
சாப்பாடு விழுங்குவதில் சிரமம்
கழுத்து தூக்குவதில் சிரமம்
புரண்டு படுப்பது சிரமம்
சில நேரங்களில் கை கால்கள் மரமரப்பு போன்றவை வரலாம்.
தீவிர நிலையில் மூச்சுத்திணறல் வரை உண்டு செய்யும்.எனினும் பொதுவான அறிகுறி கை, கால்கள் பலவீனமாக இருப்பதும் அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்வும் தான்.
English Summary
Guillain Barre syndrome has killed 8 people affected 205 people