குஜராத் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! - Seithipunal
Seithipunal


டெல்லியை விமான நிலையத்தை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்திலும் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். 8பேர் படுகாயம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தில் மேற்கூரை கனமழை காரணமாக இடிந்து விழுந்தது விபத்துள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோரவிபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி விமான நிலையத்தை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat airport roof collapse accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->