குஜராத் தேர்தல்: மோர்பி பால விபத்தில் ஆற்றில் குதித்து காப்பாற்றிய வேட்பாளர் வெற்றி.!
Gujarat BJP kantilal amrudya Victory
குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர். 1 மற்றும் 5ல் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, டிசம்பர் 8 ஆன இன்று வாக்கு எண்ணிக்கை நடைந்து வருகின்றது.
இதில் மோர்பி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவுள்ள வேட்பாளர் யார் என பலத்த எதிர்பார்ப்பானது நிலவி வந்தது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பு வேட்பாளராக படேல் ஜெயந்திலால் என்பவரும், பாஜக வேட்பாளராக கான்டிலால் அம்ருதியா என்பவரும் போட்டியிட்டனர்.
இதில், 62,000 வாக்குகளுக்கு மேல் அம்ருதியா பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், அவர் 39,000-க்கும் அதிகமான வாக்குகளையே பெற்றுள்ளார். கடந்த 1995, முதல் 2012 வரை 5 முறை மோர்பி தொகுதியில் அம்ருதியா வெற்றி பெற்றுள்ளார்.
இருப்பினும், கடந்த 2017 -ல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அரசியலிலிருந்து அம்ருதியா கிட்டதட்ட மறக்கப்பட்டுவிட்டார். மோர்பி பால விபத்து நடந்த பொழுது அம்ருதியா ஆற்றில் குதித்து பொது மக்களைக் காப்பாற்றினார். இதன் மூலம் மக்கள் மனதில் நின்றுவிட்டார். இதுதான் அவரது வெற்றிக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Gujarat BJP kantilal amrudya Victory