காங்கிரஸ் தொண்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உதவ வேண்டும் - மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பாலத்தில் மறுசீரமைக்கப்பு பணி நடைபெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு அந்தப் பாலம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 'சத்' பூஜை விழாவிற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது திரண்டிருந்தனர்.  அளவிற்கு மீறிய எடையை தாங்க முடியாமல், அந்தப் பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதனால், பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும்,177 பேர் மீட்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் காணாமல் போனவர்களை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஆகியோர்  தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த விபத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்ற நிலையில், இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளததாவது,

"குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவம் தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும்" என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gujarat bridge accident congrass leader mallikarjune karkhe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->